Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய உயர்க்கல்வி அமைச்சு கண்காணித்து வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய உயர்க்கல்வி அமைச்சு கண்காணித்து வருகிறது

புத்ராஜெயா, ஜூன்.08-

அமெரிக்காவின் ஹார்வெர்ட் பல்கலைக்கழகத்தின் SEVP எனப்படும் Student and Exchange Visitor Program சான்றிதழ் திட்டத்தை இரத்து செய்யப்பட்டதைக் கண்காணித்து வருகிறது மலேசிய உயர் கல்வி அமைச்சு. புதிய வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஹார்வெர்ட் பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்நாட்டு கூட்டரசு நீதிமன்றம் ஹார்வெர்ட் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த தற்காலிகத் தடை உத்தரவை நிலை நிறுத்தியது, இதனால் மலேசிய மாணவர்கள் உட்பட 6 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் விசாவின் நிலை மாறாமல் கல்வியைத் தொடர முடியும். மலேசிய உயர்க்கல்வி அமைச்சும் EMWDCயும் மலேசிய மாணவர்களின் நலனை உறுதிப்படுத்த தொடர்புடைய நிதியுதவி நிறுவனங்களுடனும் அமெரிக்க கல்வி அதிகாரிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளன என அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →