Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இம்மாதம் 22 ஆம் தேதியுடன் ஐஜிபியின் பதவிக் காலம் முடிவடைகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இம்மாதம் 22 ஆம் தேதியுடன் ஐஜிபியின் பதவிக் காலம் முடிவடைகிறது

கோல பிலா, ஜூன்.15-

எதிர்வரும் ஜூன் 22 ஆம் நாள் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்ளவிருப்பதாக உறுதிப்படுத்தினார் அரச மலேசியக் காவல் துறைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன். இரண்டு ஆண்டுகள் மலேசியக் காவல் துறையின் தலைவராகப் பணியாற்றிய பிறகு, தனது தாயின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

அடுத்ததாகப் பொறுப்பேற்க புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் எனத் தனது தாய் விரும்பியதாகவும், தாயின் வார்த்தைகளை மறுக்கத் துணியவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த 2023 ஜூன் 23 ஆம் நாள் அன்று 14வது காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட ரஸாருடின் ஹுசேன், இரண்டு ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →