முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் putrajayaவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தின் முன் நேற்று நடத்தப்பட்ட பேரணி குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து வருவதாக Putrajaya மாவட்ட போலிஸ் தலைவர் acp A. Asmadi Abdul Aziz தெரிவித்தார்.
இது தொடர்பாக போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விவகாரம் கோலாலப்பூர் போலிஸ் தலைமையகத்தின் சட்டப்பிரிவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் asmadi abdul Aziz கூறினார்.
2012 ஆண்டு பொது பேரணி சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டிருப்பதாக Asmadi Abdul Aziz விளக்கினார்.
நேற்று பிற்பகலில் SPRM தலைமையகத்தில் Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பிளவுப்படாத ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி பேரணி ஒன்று நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.








