Mar 17, 2026
Thisaigal NewsYouTube
அரச விசாரணை ஆணைத்திற்கு Raus Sharif தலைமையேற்பார்
தற்போதைய செய்திகள்

அரச விசாரணை ஆணைத்திற்கு Raus Sharif தலைமையேற்பார்

Share:

ஜோகூர் கடற்பகுதியில் வீற்றிருக்கும் Batu Puteh, Middle Rocks மற்றும் South Ledge ஆகிய வியூகம் நிறைந்த மூன்று தீவுகளின் இறையாண்மை தொடர்பான விவகாரத்தை மறு ஆய்வு செய்வதற்காக அரச விசாரணை ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அனுமதி அளித்துள்ளார்.
இந்த அரச விசாரணை ஆணையத்தின் தலைவராக நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி Tum Muhamad Raus Sharif நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அரச ஆணையத்தில் மொத்தம் ஆறு பேர், நியமிக்கப்பட்டுள்ளனர். ஆணையத்தின் துணைத் தலைவராக கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி Zainun Ali நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News