Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அன்வாருக்கு எதிரான வழக்கில் நீதி நிலை நாட்டப்படுவதற்குத் தொடர்ந்து போராடுவேன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அன்வாருக்கு எதிரான வழக்கில் நீதி நிலை நாட்டப்படுவதற்குத் தொடர்ந்து போராடுவேன்

கோலாலம்பூர், ஜூன்.12-

போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாக தமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றவியல் வழக்கில் இன்று, தாம் விடுதலை செய்யப்பட்ட போதிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள சிவில் வழக்கில் நீதி நிலை நாட்டப்படுவதற்குத் தொடர்ந்து போராடப் போவதாக முகமட் யூசோப் ரவுத்தர் இன்று உறுதி பூண்டுள்ளார்.

நாட்டின் நீதிபரிபாலனத்தின் மூலம் தமது போராட்டம் தொடரும் என்று கோலாலம்பூர், ஜாலான் டூத்தா நீதிமன்ற கட்டடத்தில் தனது வழக்கறிஞர்கள் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் யூசோப் ரவுத்தர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சிவில் வழக்கைத் தாம் தொடுத்துள்ள காரணத்தினால் தமக்கு பல வழிகளில் அநீதி இழைக்கப்பட்டு, தமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக யூசோப் ரவுத்தர் குறிப்பிட்டார்.

எனினும் நீதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட யூசோப் ரவுத்தர், தமக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் மலேசிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

அன்வாருக்கு எதிரான வழக்கில் நீதி நிலை நாட்டப்படுவதற்குத் ... | Thisaigal News