Jul 28, 2026
Thisaigal NewsYouTube
காவலாளியை காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

காவலாளியை காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

மலாக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வயதான காவலாளி ஒருவரை அடித்து, கடும் காயங்களை விளைவித்ததாக 21 வயது இளைஞர் ஒருவர் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஒரு சமையல்காரரான ஹெர்மன் ரிவே, என்பவர் மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 8 மணியளவில் மலாக்கா தெங்காவில் பங்சாபுரி லக்சமனா சேங் ஹோ 2 அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 68 வயது காவலாளி எஸ். வேதநாயகம் ஜோசப் என்பவரை கண்மூடித்தனமாக தாக்கி காயங்களை விளைவித்ததாக அந்த சமையல்காரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த வீடமைப்புப்பகுதியின் கீழ் தளத்தில் தவறான பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த காவலாளி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவரை தாக்கி அராஜகம் புரிந்ததாக ஹெர்மன் ரிவேக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்