Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி

கோலாலம்பூர், ஜூன்.14-

செயற்கை நுண்ணறிவான ஏஐ சகாப்தத்திற்குத் தயார்படுத்தும் வகையில் கிட்டத்தட்ட 4 லட்சம் ஆசிரியர்களுக்கு ஏஅய் சாதனங்களைப் பயன்படுத்தி, எவ்வாறு கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள முடியும் என்பதைப் போதிக்கும் பயிற்சியை மனித வள அமைச்சு வழங்கவிருப்பதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு ஏஐ என்ற தலைப்பில் இந்த பயிற்சி வழங்கப்படும். நாடு முழுவதும் மூன்று லட்சத்து 95 ஆயிரம் ஆசிரியர்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், கல்வி அமைச்சுடன் இணைந்து போதிக்கப்படும் என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத் திறன்களை வழங்குவது மட்டுமின்றி வகுப்பறைகளில் அத்தகைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பான நெறிமுறைகளைப் பற்றி, அவர்களின் புரிதலை ஆழப்படுத்துவதும் நோக்கமாக இது கொண்டிருக்கும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →