Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லருடன் மோதியதில் 73 வயது முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

டிரெய்லருடன் மோதியதில் 73 வயது முதியவர் மரணம்

Share:

அலோர் ஸ்டார், ஏப்ரல் 17-

கெடா, மெர்காங், ஜாலான் கங்சா-வில் முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து, டிரெய்லரில் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று காலை 10.04 மணியளவில் தமது தரப்புக்கு கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து குழு ஒன்று அவ்விடத்திற்கு விரைந்ததாக அலோர் ஸ்டார் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் அஹ்மத் நௌபால் அப்துல்லா தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் ஹோண்டா EX-5 மோட்டார் சைக்கிள் உட்பட டிரெய்லர் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இருந்ததாக அஹ்மத் நௌபால் தகவல் வெளியிட்டார்.

பாதிக்கப்பட்ட 73 வயதுடைய அந்த முதியவரின் தலை மற்றும் உடல் நசுக்கப்பட்ட நிலையில், டிரெய்லரின் முன் டயருக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டதாக அஹ்மத் நௌபால் கூறினார்.

சவப் பரிசோதனைக்காக பாதிக்கப்பட்டவரின் உடல் சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அஹ்மத் நௌபால் இன்று விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்