May 22, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டுமே டீசல் உதவித்தொகை
தற்போதைய செய்திகள்

முக்கிய போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டுமே டீசல் உதவித்தொகை

Share:

புத்ராஜெயா, மே 30-

அரசாங்கம் அறிவித்துள்ள டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித் தொகையானது, மக்களுக்கான பிரதான போக்குவரத்து சேவையை வழங்கி வரும் டீசலை பயன்படுத்தி வரும் வாகனங்கள் மட்டும் இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளன என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் அர்மிசான் முகமது அலி இன்று விளக்கம் அளித்துள்ளார்.

டீசல் எண்ணெய்யை பயன்படுத்தும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படாது. மாறாக, மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மட்டுமே அரசாங்கத்தின் இலக்குக்கு உரிய உதவித் தொகையை பெற முடியும் என்று அமைச்சர் விளக்கினார்.

இந்த உதவித் தொகையை பெறுவதற்கு 10 வகையான பொது போக்குவரத்து வாகனங்களும், பொருட்களை ஏற்றிச்செல்லும் 23 வகையான வாகனங்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் அறிவித்து இருப்பதை அமைச்சர் அர்மிசான் முகமது அலி இன்று மறு உறுதிப்படுத்தினார்.

Related News