Putrajaya வில் கடந்த வியாழக்கிழமை, Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் sprm விசாரணைக்கு உடபடுத்தப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, பெரும் கூட்டத்தைத் திரட்டிய நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Dato Azmi Abu Kasim தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று Azmi Abu Kasim குறிப்பிட்டார்.
தவிர இது தொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.








