Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நேர்மையின் அடையாளமாக திகழும் KK மார்ட் நிறுவன கடை!
தற்போதைய செய்திகள்

நேர்மையின் அடையாளமாக திகழும் KK மார்ட் நிறுவன கடை!

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 09-

கோலாலம்பூர், பங்சார்-ரிலுள்ள KK மார்ட் கடைக்கு பொருள் வாங்க சென்றிருந்த நிர்மலா ராமு எனும் வாடிக்கையாளர், பொருட்களுக்கான பணத்தைச் செலுத்தும்போது, தெரியாத்தனமாக அவரது பணப்பையை அங்கேயே விட்டுசென்றுள்ளார்.

30 நிமிடங்களுக்கு பிறகு வீட்டை வந்தடைந்தும், தமது பணப்பை காணாமல் போனதை உணர்ந்த அவர், ஒருவேளை அது சம்பந்தப்பட்ட KK மார்ட் கடையில் இருக்குமோ என்ற சந்தேகத்தில் அக்கடைக்கு விரைந்துள்ளார்.

பணத்தை செலுத்துமிடத்தில் வேறொரு கேஷியர் இருந்த நிலையில், அவரிடம் தனது பணப்பை காணாமல் போனதை நிர்மலா விவரித்துள்ளார். சம்பந்தப்பட்ட பணப்பை அவருக்கு சொந்தமானாதா என்பது குறித்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு உறுதிபடுத்திய அந்த cashier பின்னர், அந்த பணப்பையை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

தனது பணப்பையில் இருந்த தொகை உட்பட அனைத்தும் திரும்ப கிடைத்ததில் நிம்மதி பெருமூச்சுவிட்ட நிர்மலா, KK மார்ட் கடையின் கேஷியர்-ரின் நேர்மையைப் பாராட்டியுள்ளார்.

அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனை விவகாரத்தில் KK மார்ட் நிறுவன கடை, பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டுவரும் சூழலில், இந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்