May 22, 2026
Thisaigal NewsYouTube
ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரியின்றி வாகனங்களை பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள்
தற்போதைய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரியின்றி வாகனங்களை பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள்

Share:

முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரியின்றி மோட்டார் சைக்கிள், கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டவர்களின் அலட்சிய போக்கு அவ்விடத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் மூலம் அம்பலமானது.

கடந்த மூன்று நாட்கள் Negeri Sembilan - னில் மேற்கொள்ளப்பட்ட Operasi Hari Raya Aidiladha திடீர் சோதனையில் மொத்தம் 25 வாகனங்களை Negeri Sembilan சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Haji பெருநாளை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் இந்த சிறப்பு சோதனையானது கடந்த ஜூன் 10 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரையில் நடத்தப்படவிருப்பதாக Negeri Sembilan சாலை போக்குவரத்து துறையின் இயக்குநர் Hanif Yusabra Yusuf அறிவித்தார்.

இந்நடவடிக்கையின் வாயிலாக 29 குற்றங்களை உட்படுத்திய மொத்தம் 25 வாகனங்கள் வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக Hanif Yusabra மேலும் குறிப்பிட்டார்.

Related News