Sep 28, 2026
Thisaigal NewsYouTube
விக்டர் சின் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்: சைஃபுடின் அதிரடி
தற்போதைய செய்திகள்

விக்டர் சின் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்: சைஃபுடின் அதிரடி

Share:

கோலாலம்பூர், மார்ச்.25-

'கார்ப்பரேட் மாஃபியா' புகார்களுக்கு உள்ளாகியுள்ள தொழிலதிபர் விக்டர் சின் (Victor Chin) தற்போது எங்கே இருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டத்தில் பேசிய அவர், விக்டர் சின் மீதான விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும், அவரது கடப்பிதழை ரத்து செய்வது குறித்து அதிகாரிகள் முறைப்படி முடிவெடுப்பார்கள் என்றும் கூறினார்.

முன்னதாக, விக்டர் சின் வெளிநாட்டில் இருப்பதாகவும், சர்வதேச போலீஸ் துறையின் உதவியுடன் அவர் கண்காணிக்கப்படுவதாகவும் போலீஸ் துறை தலைமை அதிகாரி தெரிவித்திருந்தார்.

சிலாங்கூரில் உள்ள விக்டர் சின்னின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் அண்மையில் போலீஸ் துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. கட்டாய நிறுவனக் கையகப்படுத்துதலில் சில ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து போலீஸ் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்