Sep 28, 2026
Thisaigal NewsYouTube
அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்: அண்டை வீட்டார் சென்றபோது வெளிச்சத்திற்கு வந்த சோகம்
தற்போதைய செய்திகள்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்: அண்டை வீட்டார் சென்றபோது வெளிச்சத்திற்கு வந்த சோகம்

Share:

மலாக்கா, குருபோங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது வீட்டிற்குள்ளேயே உயிரிழந்து, உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை அண்டை வீட்டார் அந்த நபரைச் சந்திக்கச் சென்றபோது, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்றபோது, அந்த நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவர் இறந்து நான்கு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்