Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசினிடம் திங்கட்கிழமை விசாரணை
தற்போதைய செய்திகள்

முகைதீன் யாசினிடம் திங்கட்கிழமை விசாரணை

Share:

வரும் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜொகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைசான் கயாத்டிற்கு வாக்களிப்பது ஒரு பாவச் செயலாகும் என்று துவேசத்தன்மையில் பேசி இருப்பதாக கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ய இருக்கின்றனர்.

இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை எழுப்பக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டபோதிலும் பூலாய் இடைத்தேர்தலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருக்கும் முகைதீன் யாசினிடம் வரும் திங்கட்கிழமை புக்கிட் அமான் போலிசார் விசாரணை செய்யவிருப்பதாக போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.

Related News