Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டவரிடம் கொள்ளை, ஐந்து போலீஸ்காரர்கள் கைது
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டவரிடம் கொள்ளை, ஐந்து போலீஸ்காரர்கள் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 09-

வெளிநாட்டவர் ஒருவரை மடக்கி விலை உயர்ந்த கைகடிகாரத்தையும், இரண்டு லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தையும் கொள்ளையடித்ததாக நம்பப்படும் ஐந்து போலீஸ்காரர்கள் உட்பட எழுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ்காரர்களுக்கு அப்பாற்பட்டு கைது செய்யப்பட்ட அந்த இரண்டு நபர்களில் ஒருவர் முன்னாள் போலீஸ்காரர் என்றும் மற்றொருவர் பொதுமக்களில் ஒருவர் என்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த எழுவரும் 28 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் ஆவர். இக்கொள்ளை சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் காயமடையவில்லை என்று ருஸ்டி இசா குறிப்பிட்டார்.

உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி மூன்று நபர்களை போலீசார் கைது செய்த வேளையில் அந்நபர் கொடுத்த தகவலின் பேரில் மற்றவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஐந்து போலீஸ்காரர்களை ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு அனுமதி தரப்பட்ட வேளையில் மற்றவர்கள் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணை பெறப்பட்டுள்ளதாக ருஸ்டி இசா தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்