Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தமிழ்ப்பள்ளிகளுக்கு மடிக்கணினி விநியோகிப்பு
தற்போதைய செய்திகள்

தமிழ்ப்பள்ளிகளுக்கு மடிக்கணினி விநியோகிப்பு

Share:

கூகல் மலேசியா என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இணைந்து மலேசிய இந்தியர்களின் சமூகவில், பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ரா, நாடு முழுவதும் உள்ள 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு 6 ஆயிரம் மடிக்கணினிகளை விநியோகிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோ ரா. ரமணன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல், தொழில்நுட்பத் துறையில் போதுமான அடிப்படை ஆற்றலை கொண்டு இருப்பதற்காக சுமார் 30 லட்சம் வெள்ளி செலவில் இதற்கான அடிப்படை கட்டமைப்பு வேலைகளை மித்ரா மேற்கொண்டு வருவதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் சுங்கை பூலோ எம்.பி.யான டத்தோ ரமணன் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

Related News