Jul 27, 2026
Thisaigal NewsYouTube
குடும்பமாது கஸ்தூரி பாதுகாப்பாக உள்ளார்
தற்போதைய செய்திகள்

குடும்பமாது கஸ்தூரி பாதுகாப்பாக உள்ளார்

Share:

ஜோகூர், மார்ச் 28-

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், கூலாயிலிருந்து பகாங், பெந்தோங்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற போது காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட தனது மனைவி கஸ்தூரி சுப்பிரமணியம், பாதுகாப்பாக உள்ளார் என்று கணவர் சி. முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

41 வயது கஸ்தூரியின் பாதுகாப்பு குறித்து கடந்த நான்கு நாட்களாக அவரின் கணவர் முத்துக் குமாரும் மூன்று பிள்ளைகளும், கவலையுற்று இருந்த நிலையில் தாம் பாதுகாப்பான ஓர் இடத்தில் இருப்பதாக தமது மனைவி குறிப்பு ஒன்றை அனுப்பியிருப்பதாக கணவர் முத்துக்குமார் திசைகளிடம் தெரிவித்துள்ளார்.

ஜோகூர், குலாய், பண்டார் புத்ரா, லோரோங் பங்காவு- வை சேர்ந்த கஸ்தூரி கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணியளவில் பெந்தோங்கில் உள்ள தமது தாயார் வீட்டிற்கு புறப்பட்ட நிலையில் அதற்கு அவரின் கைப்பேசி தொடர்பு கிடைக்காததைத் தொடர்ந்து மனைவியின் பாதுகாப்பு கருதி, கணவர் முத்துக்குமார் கோலாலம்பூர் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்