Sep 28, 2026
Thisaigal NewsYouTube
கோல லங்காட் கலவரம் தொடர்பில் 3 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோல லங்காட் கலவரம் தொடர்பில் 3 பேர் கைது

Share:

கோல லங்காட், மார்ச்.25-

சிலாங்கூர் மாநிலம், கோல லங்காட், தெலுக் பங்ளிமா காராங் பகுதியில் உள்ள ஜாலான் வாஜாவில் நடந்த கலவர சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 39 முதல் 45 வயதுடைய மூன்று ஆண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது, மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கிடையேயான தகராறில் தொடங்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலா லங்காட் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுஃபியான் அமின் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, 38 வயதுடைய நபர் ஒருவர், நேற்று போலீசில் புகார் அளித்ததையடுத்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனது வீட்டிற்கு வெளியே 45 வயதான உறவினர் ஒருவர் கையில் வாள் போன்ற ஆயுதம் ஒன்றை ஏந்தியிருந்ததாகவும், அவரைப் பலர் தாக்க முயன்றதாகவும் அந்நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கானது, குற்றவியல் சட்டம் பிரிவு 148-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுஃபியான் அமின் தெரிவித்துள்ளார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்