Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து வயது சிறுவன் 21வது மாடியிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

ஐந்து வயது சிறுவன் 21வது மாடியிலிருந்து விழுந்து மரணம்

Share:

செர்டாங், மார்ச் 23.

ஆடம்பர அடுக்குமாடி ​வீடமைப்புப்பகுதியில் ஐந்து வயது சிறுவன், 21 மாடியிலிருந்து ​கீ​​ழே விழுந்து, ​நீச்சல் குளத்தில் பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.20 மணியள​வில் செர்டாங், பண்டார் புத்ரா பெர்மாய்-யில் நிகழ்ந்தது.

நீச்சல் குளத்தில் சட்டை மிதப்பதைப் கண்டு சந்தேகித்த, ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலர், அருகில் சென்ற பார்த்த போது, சிறுவனின் உடல் ரத்தவெள்ளத்தில் மிதப்பது தெரியவந்தது. பின்னர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் மேற்பார்வையாயரின் ​மூலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக Serdang மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி. AA. அன்பழகன் தெரிவித்தார்.

ஓர் அந்நியப் பிரஜையான அந்த சிறுவன், ஏமன் நாட்டைச் சேர்ந்தவன் என்று அடையாளம் கூறப்பட்டதாக அன்பழகன் குறிப்பிட்டார்.

சம்பவம் நிகழும் போது அந்த சிறுவனின் பெற்றோர் அறையில் இருந்ததாகவும், சிறுவன் மட்டம் வரவேற்பு அறையில் விளையாட்டிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிறுவன் ஜன்னல் வழி ​கீழே விழுந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அன்பழகன் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்