பேராக், தாப்பாவில் உள்ள பிரசித்திப் பெற்ற தாமான் எக்கோ-ரிம்பா லதா இஸ்கந்தர் பூங்கா, பராமரிப்பு பணிகளுக்காகப் பொதுமக்களுக்கு காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இந்த மூடல் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகப் பேராக் மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை இப்பகுதியில் பொதுமக்கள் எந்தவொரு பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் இந்த உத்தரவை மீறி நடப்பார்களேயானல் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், இழப்புகள் அல்லது விபத்துகளுக்கு வனத்துறை பொறுப்பேற்காது என்றும், விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் தங்கள் சொந்தப் பொறுப்பிலேயே செயல்பட வேண்டும் என்றும் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.








