Jul 10, 2026
Thisaigal NewsYouTube
இரு லாரிகள் மோதல்: இரு ஓட்டுநர்கள் காயம்
தற்போதைய செய்திகள்

இரு லாரிகள் மோதல்: இரு ஓட்டுநர்கள் காயம்

Share:

நிபோங் திபால், சுங்கை ஜாவி, ஜாலான் தாமான் குவாங் இண்டா சாலையில் இன்று காலை மூன்று டன் மற்றும் ஐந்து டன் எடையுள்ள இரு ஹினோ லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர்.

இன்று காலை 7.04 மணிக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இந்த விபத்து குறித்த அவசர அழைப்பு கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்கை பகாப் தீயணைப்புப் படையினர், கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கடந்து காலை 7.21 மணிக்கு அங்கு வந்தடைந்தனர்.

லாரிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 46 மற்றும் 26 வயதுடைய இரு ஓட்டுநர்களும் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காலை 8.21 மணியளவில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விபத்தில் 46 வயது ஓட்டுநருக்கு தலையில் காயமும் காலில் முறிவும் ஏற்பட்டது. மற்றொரு 26 வயது ஓட்டுநருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே அவர்களுக்கு சுகாதார இலாகா மருத்துவ அதிகாரிகள் முதலுதவி வழங்கியதைத் தொடர்ந்து, இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் சுங்கை பாக்காப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related News

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்