Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கடலோரப் போர்க் கப்பல்கள் கட்டுமானத்தை நேரில் கண்டறிந்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடலோரப் போர்க் கப்பல்கள் கட்டுமானத்தை நேரில் கண்டறிந்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

லுமுட், ஜூன்.15

பேரா, லுமுட் கடற்படைத் தளத்தில் உள்ள லுமுட் கடற்படைக் கப்பல் கட்டும் தளத்தில் அரச மலேசியக் கடற்படையின் கடலோரப் போர்க் கப்பல்கள் கட்டுமானப் பணிகளின் நிலவரம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ரஃஹிம் இன்று கண்காணித்தார். LCS 2 கப்பல் கடந்த மே 8 ஆம் தேதி நீரில் இறக்கப்பட்டதுடன், LCS 1 கப்பல் மே 23, 2024 அன்று திட்டமிட்டபடி நீரில் இறக்கப்பட்டு, மே 2025 முதல் 'Setting to Work' கட்டத்தைத் தொடங்கியுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐந்து LCS கப்பல்களின் ஒட்டுமொத்தப் பணிகள் மே 25 நிலவரப்படி 72.43 விழுக்காடாக நிறைவடைந்துள்ளன. LCS 3 முதல் LCS 5 வரையிலான கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், LCS 3 2027-இலும், அடுத்தடுத்த கப்பல்கள் எட்டு மாத இடைவெளியிலும் 2029-க்குள் LCS 5 முழுமையாக முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →