Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தியதற்காக தம்பதியர் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தியதற்காக தம்பதியர் கைது

Share:

பாசிர் மாஸ்,ஜன.31
கம்போங் புனுட் சுசுவில் மனைவியின் உள்ளாடையில் 2,280 methamphetamine என்கிற போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததை தொடர்ந்து தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

கணவரின் காற்சட்டையிலும் 3.9 கிரேம் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 25,110 வெள்ளியாகும்.

நேற்று மாலை 6:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 26 க்கும் 27 க்கும் உட்பட்ட வயதுடைய சந்தேகிக்கும் அத்தம்பதியர்கள் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முஹமாட் சாக்கி ஹருன் கூறினார்.

கைது செய்யப்பட்ட அவ்விருவரும் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முஹமாட் சாக்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related News