லஞ்ச ஊழல், சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் 47 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் துணைப்பிரதமரும், பாரிசான் நேஷனல் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டது தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோ செரி அசாலினா ஓத்மான் செயிட் தெரிவித்தார்.
பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறும் மக்களைக் கூட்டத்தில் தற்போது சர்ச்சைக்குரிய விவகாரமாக விஸ்வரூபம் எடுத்து வரும் துணைப் பிரதமர் ஜாஹிட் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பில் உரிய விளக்கத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வழங்குவார் என்று அசாலினா ஓத்மான் நம்பிக்கைத் தெரிவித்தார். 







