Mar 21, 2026
Thisaigal NewsYouTube
புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும்
தற்போதைய செய்திகள்

புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும்

Share:

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, வரும் மே 14 ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது.
குறிப்பாக, கல்வியின் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் இலக்கவியல் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பாக இது அமையவிருக்கிறது.

மலேசியாவில் உள்ள தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாக தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உறுதிபடுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். எனவே, செயற்கை நுண்ணறிவு மற்றும் நடப்பில் உள்ள சில கூறுகளைப் பயன்படுத்தி மலேசியர்களின் ஆற்றலை வளர்க்க மைக்ரோசாப்ட்– டில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்துவோம் என்று தியோ நீ சிங் கூறினார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக தொழில்நுட்ப கண்காணிப்பு மாநாடான ஐ.ஆர்.சி யில் நிறைவுரையாற்றியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தியோ நீ சிங் இதனை தெரிவித்தார்.

இம்மாநாடு ஆசியான் மற்றும் இதர நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டாளர்களை ஒன்றிணைத்து, இணையத்திற்கான சிறந்த அணுகலை உறுதி செய்வதிலும், இணையக் குற்றங்களின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் தங்களுக்குரிய நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டதாக தியோ நீ சிங் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து