Jul 15, 2026
Thisaigal NewsYouTube
விலை உயர்வு குறித்த போலித் தகவல்: இல்லத்தரசிக்கு RM4,000 அபராதம்!
தற்போதைய செய்திகள்

விலை உயர்வு குறித்த போலித் தகவல்: இல்லத்தரசிக்கு RM4,000 அபராதம்!

Share:

விலை உயர்வு குறித்து திரெட்ஸ் செயலியில் தவறான தகவலைப் பரப்பிய இல்லத்தரசி ஒருவருக்குச் சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் 4,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

கடந்த மார்ச் 31 அன்று, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் போலி தகவல் வரைபடத்துடன் கூடிய பதிவை 34 வயதுடைய நூர் நாடியா அகமத் ஜொஹாரி என்பவர் பதிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி அகமத் புவாத் ஒத்மான் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் பொது அமைதியைக் குலைக்கும் என்றும், இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

Related News