Mar 16, 2026
Thisaigal NewsYouTube
3,000 வெள்ளி லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
தற்போதைய செய்திகள்

3,000 வெள்ளி லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Share:

ஷா ஆலாம்,ஜன.30
லஞ்சம் வாங்கியதாக ஒப்புக்கொண்ட குற்றத்திற்காக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட தன் மகன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஒரு ஆணிடம் இருந்து 3,000 வெள்ளி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் செவ்வாயன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டார் 39 வயது பெண் போலீஸ் அதிகாரி நுர் மஸ்திஷா மைடின்ஷா.

இக்குற்றச்சாட்டை அந்தப் பெண் போலீஸ் அதிகாரி மறுத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி இரவு 8.03 மணி அளவில், செராஸ், பத்து 9 பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் அவர் குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

முன்னதாக, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நுர் மத்திஷா எதிர்கொள்ளும் வழக்குக்கு 2,000 வெள்ளி ஜாமீனைப் வழங்குமாறு துணை அரசு வழக்கறிஞர் நுருல் அத்திக்கா முஹமாட் அலியாஸ் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் , புத்ராஜெயா மலேசிய லஞ்ச ஊழல் ஆணைய அலுவலகத்தில், நுர் மத்திஷா தமது வருகையை உறுதி செய்ய வேண்டும் எனும் கூடுதல் விதியையும் நீதிமன்றம் விதித்தது.

அதே சமயம், கோலாலம்பூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்படுவதாகவும் நீதிபதி அவாங் கெரிஸ்நாடா அவாங் மஹ்முட் தெரிவித்தார்.

Related News

3,000 வெள்ளி லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் குற்றஞ்சாட்டப்பட்... | Thisaigal News