Jul 27, 2026
Thisaigal NewsYouTube
24 மணிநேரத்திற்குள் திருட்டு புரிந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

24 மணிநேரத்திற்குள் திருட்டு புரிந்த நபர் கைது

Share:

கோலா சிலாங்கூர், ஏப்ரல் 16-

கோலா சிலாங்கூர், பாசிர் பெனாம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலின் பார்க்கிங் பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினியை திருடியதாக இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில் சந்தேகிக்கும் 20 வயதுடைய இளைஞன் கம்போங் பெர்மாத்தாங் தெங்கா அருகேயுள்ள ஓர் இடத்தில் கைது செய்யப்பட்டதாக கோலா சிலாங்கூர் மாவட்ட துணை போலீஸ் அதிகாரி துணை கண்காணிப்பாளர் முகமட் அம்பியா நோர்டின் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் அந்த இளைஞரும் அவரின் நண்பர்களும் பாதிக்கப்பட்ட நபரின் கார் கண்ணாடியை உடைத்து பையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியை திருடி சென்றதாக முகமட் அம்பியா கூறினார்.

சந்தேகிக்கும் இளைஞன் 24 மணி நேரத்திற்குள் போலீசாரால் கைது செய்யப்பட்ட வேளையில் அவருடன் கூட்டாக திருட்டு புரிந்த நண்பர்கள் மேலும் தேடப்பட்டு வருவதாக முகமட் அம்பியா விவரித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 379 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்