அமெரிக்கா, நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் ஐநா. வின் 78 ஆவது பேராளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியப் பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று இன்று செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கிற்கு பயணமாகிறார். இம்மாநாடு வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றப்பிறகு உலக நாடுகளின் உயரிய பீடமான ஐ.நா. மாநாட்டில் அன்வார் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.பருவநிலை மாற்றம், 2023 ஆம் ஆண்டுக்குள் அதனை கையாளுவதற்கான நடவடிக்கைகள் உட்பட உலக நாடுகள் நலன் சார்ந்த பல முக்கிய விவகாரங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமது தலைமையில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மடானி கொள்கை குறித்தும் உறுப்பு நாடுகளுடன் அன்வார் பகிர்ந்து கொள்வதற்கு திட்டம் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







