கோலாலம்பூர், அக்டோபர்.02
கோலாலம்பூர், டாமன்சாரா டோல் சாவடி அருகில் கைவிடப்பட்டு கிடந்த வாகனத்தில் 33 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த எம்.பி.வி வாகனம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது குறித்து சந்தேகித்த போலீசார் அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 150 கிலோ எடை கொண்ட ஷாபு வகை போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்பு இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.








