Jun 30, 2026
Thisaigal NewsYouTube
RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

Share:

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும், தகுதியுள்ள மலேசியர்களுக்கான RON95 பெட்ரோல் விலை தொடர்ந்து லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் என்ற மானிய விலையிலேயே பராமரிக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்பார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, மலேசியா தனது உள்நாட்டு எரிவாயுவான கியஸ் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விலையைத் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கத்திற்கு மாதம் சுமார் 2 பில்லியன் ரிங்கிட் செலவாகிறது. இருப்பினும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பெட்ரோல் ரோன் 95 மானிய அடிப்படையிலான விலை குறைந்தது மே மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் எண்ணெய் விநியோகத் தடைகளால் உலகளாவிய எரிசக்தி சந்தை பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில், தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாசுடன் இணைந்து மலேசியா தனது விநியோகத்தை உறுதிப்படுத்தி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

Related News