Jun 30, 2026
Thisaigal NewsYouTube
5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Share:

ஐந்து பேர் உயிரிழப்பிற்குக் காரணமான சாலை விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவனுக்கு, முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துள்ள கூச்சிங் உயர்நீதிமன்றம், ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய, சிறுவனை ஹென்றி கர்னி பள்ளிக்கு அனுப்பும் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதி ஃபரித்ஸ் கோஹிம் அப்துல்லா, அதற்குப் பதிலாக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

மேலும், இந்தச் சிறைத் தண்டனையானது, கடந்த 2025-ஆம் ஆண்டு, ஜூன் 16 முதல் அமலுக்கு வரும் என்றும், சிறுவன் சிறைத் தண்டனை அனுபவிக்கும் காலம் முழுவதும் வயது வந்த கைதிகளிடமிருந்து தனித்து வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்