Jul 18, 2026
Thisaigal NewsYouTube
ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

Share:

டாமான்சாரா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், அவர் தனது முகநூல் பதிவில், அரசியலமைப்பு மன்னராட்சி அமைப்பு மற்றும் ருகுன் நெகாரா குறித்து கருத்து வெளியிட்டது தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வழக்கின் விசாரணை அறிக்கை கடந்த மே 25-ஆம் தேதி சட்டத்துறைத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் மேலதிக விசாரணைக்காக மீண்டும் போலீசாரிடம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சைஃபுதீன் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்தும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அது முழுமையடைந்த பின்னரே இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சைஃபுதீன் தெரிவித்துள்ளார்.

Related News