Jun 30, 2026
Thisaigal NewsYouTube
"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்
தற்போதைய செய்திகள்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

Share:

பினாங்கு மாநிலத் தேர்தல் அறிக்கையில் கூறப்படாத நில வரி உயர்வை, ஆயிரக்கணக்கான மடங்கு உயர்த்தியதன் மூலம் மக்களையும், தேர்தல் வாக்குறுதியையும் முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தலைமையிலான மாநில அரசாங்கம் ஏமாற்றுவதாக பகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்காக கொள்கைகளை மாற்றலாம் என்ற முதலமைச்சரின் பதிலை, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விவகாரத்தில் ஏற்க முடியாது என லிம் கடுமையாகச் சாடியுள்ளார்.

பினாங்கு மாநில அரசின் இத்தகைய அதிரடி வரி உயர்வு சாதாரண நில உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும் என லிம் எச்சரித்தார்.

2023 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல் அறிக்கையில் 'யாரையும் கைவிட மாட்டோம்' என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது பொருளாதார நிலைத்தன்மையைக் காரணம் காட்டி வரிகளை ஆயிரக்கணக்கான மடங்கு உயர்த்துவது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றும் அவர் சாடினார்.

பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் இம்முடிவை மறுபரிசீலனை செய்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு முதலமைச்சர் சாவ் கோன் இயோவை, லிம் வலியுறுத்தியுள்ளார்.

Related News