Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கு வழங்கும் 100 வெள்ளி மதிப்புள்ள புத்தக பற்றுச்சீட்டு வெற்றியை அதிகரித்துள்ளது
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு வழங்கும் 100 வெள்ளி மதிப்புள்ள புத்தக பற்றுச்சீட்டு வெற்றியை அதிகரித்துள்ளது

Share:

தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி உட்பட உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு 100 வெள்ளி மதிப்புள்ள புத்தக பற்றுச்சீட்டு வழங்கப்படுவதை குறித்து கடந்த வியாழக்கிழமை பிரதமர் Dato Sri Anwar Ibrahim அறிவித்திருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு Kuala Lumpur அனைத்துலக புத்தக கண்காட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நாட்டில் புத்தகத் துறைக்கு அதீத ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் பிரதமர் இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட பின், புத்தகத்துறையில் ஈடுபட்டு வரும் அனைத்து தரப்பினர்களுக்கும் இது ஒரு லாபமாக கிடைக்கப் பெற்றதாக Kuala Lumpur அனைத்துலக புத்தக கண்காட்சியின் தலைவர் Mohd Khair Ngadiron தெரிவித்தார்.

மாணவர்கள் அந்த புத்தக பற்றுச்சீட்டை பயன்படுத்தி புத்தகங்களை ஆன்லைன் மூலம் வாங்குவதற்கு ஊக்குவிப்பதாக Mohd Khair இன்று கூறினார்.

நேற்று, சுமார் 50,000 புத்தக பற்றுச்சீட்டுக்களை உயர்கல்வி அமை‌ச்சக‌ம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவை அனைத்தும் ஐந்து மணி நேரத்திற்குள் முடிவடைந்து, மாணவர்கள் புத்தகங்களை ஆன்லைனில் பெற்றுக் கொண்டதாகவும் Mohd Khair மேலும் விளக்கினார்.

இந்த 10 நாட்களில் 1.8 மில்லியன் பார்வையாளர்கள் PBAKL 2024 - கை பார்வையிட வந்ததாகவும் இன்றுடன் இந்த புத்தக கண்காட்சி நிறைவடைவதாகவும் அவர் தகவல் அளித்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி