வயது குறைந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படும் இரண்டு ரொஹிங்யா ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் ஒருவர், அந்த மாணவிக்கு வாட்சப் செயலில் முதல் நாள் அறிமுகமான நபர் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் வியாழக்கிழமை மலாக்கா,பந்தாய் க்லேபாங்கில் ஒரு காருக்குள் அந்த 15 வயது மாணவியை சம்பந்தப்பட்ட நபர்கள் மாறி, மாறி பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு பின்னர் அந்த மாணவியின் சகோதரர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து 14 மற்றும் 27 வயதுடைய இரண்டு ரொஹிங்யா ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சைனோல் சாமா தெரிவித்தார்.மூன்றாம் படிவ மாணவியான அந்த இளம் பெண், கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தமக்கு அறிமுகமான 14 வயது ரொஹிங்யா ஆடவருடன் வெளியில் சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சைனோல் சாமா குறிப்பிட்டார்.








