Jul 28, 2026
Thisaigal NewsYouTube
விபச்சார மையத்தில் 24 பேர் கைது
தற்போதைய செய்திகள்

விபச்சார மையத்தில் 24 பேர் கைது

Share:

ஈப்போ, மே 06-

ஈப்போவை சுற்றியுள்ள விபச்சார மையம் மற்றும் பொழுதுபோக்கு மையத்தில் நேற்று அதிகாலை மேற்கொண்ட Ops Gegar திடீர் சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 24 சட்டவிரோத குடியேறிகளை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 18 தாய்லாந்து பெண்கள், 5 வியட்நாம் பெண்கள் உட்பட ஒரு தாய்லாந்து ஆணும் அடங்குவர் என்று பேராக், மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் மியொர் ஹெஸ்புல்லாஹ் மியொர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.

20க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் மேல் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்ததற்காக சம்பந்தப்பட்ட பிரஜைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மியொர் ஹெஸ்புல்லாஹ் கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மேல் விசாரணைக்காக ஈப்போ குடிநுழைவு டிப்போவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மியொர் ஹெஸ்புல்லாஹ் மேலும் தகவல் அளித்தார்.

வெளிநாட்டு குடியேறிகளை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தும் அல்லது பாதுகாக்கும் எந்தவொரு முதலாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மியொர் ஹெஸ்புல்லாஹ் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்