Jul 27, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டு மோசடிகளில் ஆண்களே அதிகம் எளிதில் ஏமாறுகின்றனர்
தற்போதைய செய்திகள்

முதலீட்டு மோசடிகளில் ஆண்களே அதிகம் எளிதில் ஏமாறுகின்றனர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

மலேசிய பங்குப் பத்திர ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் முதலீட்டு மோசடிகளில் அதிகம் ஆண்களே எளிதில் ஏமாறுவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு மொத்தம் ஆயிரத்து 302 பேரை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 384 பேர் அதாவது 30 விழுக்காட்டினர் முதலீட்டு மோசடிகளுக்கு எளிதில் இலக்காகுகின்றனர். அவர்களில் 59 விழுக்காட்டினர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 384 பேரில் 34 விழுக்காட்டினர் அதாவது 31 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகம் முதலீட்டு மோசடிகளுக்கு எளிதில் இலக்காகும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

வருமான அடிப்படையில் பார்க்கையில் அதிகமாக 44 விழுக்காட்டினர் அதாவது மாதம் ஐந்தாயிரத்திற்கு குறைவான வருமானத்தைப் பெறும் B40 தரப்பினர் மோசடிக்குரிய முதலீடுகளை எளிதில் நம்புகின்றனர்.

பெரும்பாலான மோசடிகளில், ஏமாற்றுப்பேர்வழிகள் போலியான இணையப் பக்கம், சமூக ஊடக பக்கம், வெறொருவரின் பேங்க் கணக்கு முதலானவற்றை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது கண்டறியப்பட்டிருப்பதாக, மலேசிய பங்குப் பத்திர ஆணையம் கூறியுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்