Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கருத்து வேறுபாடு கத்தி குத்தில் முடிந்தது
தற்போதைய செய்திகள்

கருத்து வேறுபாடு கத்தி குத்தில் முடிந்தது

Share:

ஹுலு சிலாங்கூர், பாத்தாங் காலியில் உள்ள ஒரு வீட்டின் முன் கருத்து வேறுபாடு காரணமாக 27 வயதுடைய பெண் கத்தி குத்திற்கு ஆளானார்.

நேற்று மாலை 4.04 மணியளவில் மற்றொரு பெண்ணால் பாதிக்கப்பட்டவர் கத்தி குத்திற்கு ஆளாகியிருப்பதாக ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் ஃபைசால் தஹ்ரிம் தெரிவித்தார்.

31 வயதுடைய பெண்ணுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு காரணமாக இச்சம்பவம் நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அஹ்மாட் ஃபைசால் கூறினார்.

குற்றம் புரிந்தவர் என சந்தேகிக்கும் பெண் 26.5 சென்டிமீட்டர் கொண்ட காய்கறி வெட்டும் கத்தியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை வயிற்றில் குத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.

கத்தி குத்திற்கு ஆளான அப்பெண் செலாயாங் மருத்துவமனையில் சேர்க்கபட்ட வேளையில் சந்தேகிக்கும் நபர் குவால குபு பாரு, செஷென் நீதிமன்றத்தில் இன்று தடுப்பு காவலில் வைக்கபட்டுள்ளதாக அஹ்மாட் ஃபைசால் அறிவித்தார்.

Related News