Mar 16, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டாம் ! - நேரடியாகவே கட்சியில் இருந்து நீக்குங்கள் !
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டாம் ! - நேரடியாகவே கட்சியில் இருந்து நீக்குங்கள் !

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்முக்கு ஆதரவைத் தெரிவித்த பெர்சத்து கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள் என தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் Suhaili Abdul Rahman அரைகூவல் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆறு ஆண்டுகள் வரை சுஹைலி பெர்சத்து கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றி வளைத்து சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தன்னையும் தன் போல் பிரதமருக்கு ஆதரவளித்த மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி விடக் கூறினார்.

லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைலியோடு Tanjong Karang நாடாளுமன்ற உறுப்பினர் Zulkafperi Hanapi, Bukit Gantang நாடாளுமன்ற உறுப்பினர் Syed Abu Hussin Hafiz Syed Abdul Fasal, Jeli நாடாளுமன்ற உறுப்பினர் Zahari Kechik, Gua Musang நாடாளுமன்ற உறுப்பினர் Mohd Azizi Abu Naim, Kuala Kangsar நாடாளுமன்ற உறுப்பினர் Iskandar Dzulkarnain Abdul Khalid ஆகியோர் பிரதமர் அன்வார் இப்ராஹிம்மின் ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்

தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும் நடவடிக்கையானது பெர்சத்துவின் சட்டதிட்டத்திற்கு எதிரானது அல்ல எனக் குறிப்பிடும் சுஹைலி, கட்சியின் சட்ட திருத்தம் செய்யப்படு முன்னரே அன்வாரை ஆதரிக்கும் தங்கள் முடிவைத் தெரிவித்து விட்டதாக அவர் மேலும் கூறினார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பெர்சத்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராததால், நங்கள் எங்கள் சொந்த முடிவை எடுக்கும் நிலைக்கு ஆளானோம் என்றார் சுஹைலி.

பிரதமர் அன்வாருக்கு ஆதரவளித்ததன் விளைஆக, லாபுவான் மக்கள் தற்போது மற்ற வட்டாரங்களைப் போல் மேம்பாட்டைக் காண்கிறது என்றார் அவர்.

Related News