Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பேருந்தின் பிரேக் செயலிழந்து விட்டதா? விசாரணையில் முடிவு செய்யப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேருந்தின் பிரேக் செயலிழந்து விட்டதா? விசாரணையில் முடிவு செய்யப்படும்

கெரிக், ஜூன்.13-

கடந்த திங்கட்கிழமை கிழக்கு மேற்குச் சாலையில் கெரிக்கில் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த பேருந்து விபத்தில், அந்த பேருந்தின் பிரேக் செயலிழந்து விட்டதாக அதன் ஓட்டுநர் அறிவித்து இருப்பது விரைவில் ஆதாரத்துடன் உறுதிச் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே பிரேக் செயலிழந்து விட்டதா? இல்லையா? என்பது குறித்து அந்த பேருந்து மீது நடத்தப்படும் சோதனையில் திட்டவட்டமாகத் தெரிய வரும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு நாட்காக தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநர், நேற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மாலை 5.45 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, பேருந்தின் பிரேக் செயலிழந்து விட்டதால் அதன் வேகத்தைத் தம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக அறிவித்து இருந்தார்.

அந்த பேருந்து ஓட்டுநரின் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து புலன் விசாரணையின் மூலம் முழுமையாக ஆராயப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு