Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு நபர்களைப் பிடிப்பதற்கு வேட்டை தொடங்கியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு நபர்களைப் பிடிப்பதற்கு வேட்டை தொடங்கியது

புக்கிட் மெர்தாஜம், ஜூன்.14-

மூன்று வீடுகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திய புக்கிட் மெர்தாஜம், தாமான் செரும்புனில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் போலீசார் இருவரைத் தீவிரமாகத் தேடி வருவதாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹெல்மி அரிஸ் தெரிவித்துள்ளார்.

அதிகாலை ஒரு மணியளவில் காரில் வந்திறங்கிய இரு நபர்கள், வெடி மருந்தின் மூலம் இந்தச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

புலன் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த மூன்று வீடுகளில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராப் பதிவை போலீசார் பெற்று, ஆய்வு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

காரில் வந்த இரு நபர்கள்தான் இந்த சதிநாச வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கானச் சாத்தியத்தை போலீசார் மறுக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

கடன் விவகாரம் தொடர்பில் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →