Dec 4, 2025
Thisaigal NewsYouTube
லவ் ஸ்கேம் மோசடி தொடர்பில் 9 பேர் கைது
தற்போதைய செய்திகள்

லவ் ஸ்கேம் மோசடி தொடர்பில் 9 பேர் கைது

Share:

பணி ஓய்வுப்பெற்று நல்ல வாழ்க்கைச் சூழலில் உள்ள தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு அவர்களிடம் காதல் மொழி பேசி, பணத்தை சூறையாடும் லவ் ஸ்கேம் மோசடி தொடர்பில் ஒரு பெண் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓன் லைன் மூலமாக வலைவீசி ஆட்களை தங்கள் மாய வலையில் சிக்க வைக்கும் இக்கும்பல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கோலாலாம்பூர் மையப்பகுதியான பி. ரம்லியில் மூன்று வெவ்வேறு சோதனைகளில் போலீசார் ஈடுபட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

இக்கும்பல் மலேசியா, சிங்கப்பூர், சீனாவை இலக்காக கொண்டு மோசடி வேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News