Dec 3, 2025
Thisaigal NewsYouTube
28 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து புங் மோக்தார் மற்றும் அவரின் மனைவி விடுதலை
தற்போதைய செய்திகள்

28 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து புங் மோக்தார் மற்றும் அவரின் மனைவி விடுதலை

Share:

சபா மாநில அம்னோ தலைவரும், கினாபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான புங் மோக்தார் ராடின் மற்றும் அவரின் மனைவி சிசி இசித்தே வும் 28 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

அம்னோ வட்டாரத்தில் சர்சைக்குரிய அரசியல்வாதியான புங் மோக்தார் மற்றும் அவரின் மனைவி சிசி இசித்தே ஆகியோர் லஞ்ச ஊழல் வழக்கில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதால் அவர்கள் எதிர்வாதம் புரிவதற்கு செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்வதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அசார் ஹமிட் இன்று பிற்பகலில் பிறப்பித்துள்ள தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அவ்விருவரையும் எதிர்வாதம் செய்வதற்கு செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அந்த தம்பதியர் முன்வைத்த வாதத்தை தாம் ஏற்றக் கொள்வதாக நீதிபதி அசார் ஹமிட் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

குற்றவாளி கூண்டில் புங் மொக்தாரின் அருகில் அமர்ந்திருந்த அவரின் மனைவியும், முன்னாள் நடிகையுமான 44 வயது சிசி இசித்தே தீர்ப்பை கேட்டு, கண்ணீர் விட்டார்.

அதேவேளையில் தீர்ப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது என்று 63 வயதான புங் மொக்தார் குறிப்பிட்டார்.

பப்லிக் முத்துவல் பங்கு முதலீட்டு நிறுவனத்தில் 15 கோடி வெள்ளியை முதலீடு செய்வதற்கு ஃபேகிரா வின் அங்கீகாரத்தை பெற்று தருவதற்கு 28 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக புங் மொக்தார் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார். இந்த லஞ்ச ஊழலில் அவருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக அவரின் மனைவி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருந்தது.

Related News