May 22, 2026
Thisaigal NewsYouTube
வீட்டில் ஏற்பட்ட தீயில் இருவர் காயங்களுக்கு இலக்காகினர்
தற்போதைய செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட தீயில் இருவர் காயங்களுக்கு இலக்காகினர்

Share:

நெகிரி செம்பிலான், மே 27-

நெகிரி செம்பிலான், ரெம்பாவ், கம்போங் செரி கெண்டாங்-ங்கிலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் காயங்களுக்கு இலக்காகினர்.

இன்று காலை மணி 7.30 அளவில், பாதி சிமெண்டிலும் பாதி பலகையிலுமான வீட்டில் ஏற்பட்ட தீயில், உயர் ஆற்றல் கொண்ட மிட்சுபிஷி டிரிட்டன் வகை வாகனம் 5 விழுக்காடும் ஹோண்டா சிவிக் ரக வாகனம் 30 விழுக்காடும் சேதமடைந்தன.

காலை மணி 7.50 அளவில் தகவல் பெற்று, ரெம்பாவ் மற்றும் தம்பின் தீயணைப்பு மீட்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்தை வந்தடைந்த போது, சம்பந்தப்பட்ட வீடு 80 விழுக்காடு வரையில் தீக்கிரையாகியிருந்தது.

காலை மணி 8.23 அளவில் அவர்கள் அனைவரும் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

அச்சம்பவத்தில், கையில் 10 விழுக்காட்டு தீப்புண் காயங்களுக்கு இலக்கான ஆடவரும் முகத்தில் 30 விழுக்காட்டு தீப்புண் காயங்களுக்கான மற்றோர் ஆடவரும் சிகிச்சைக்காக தம்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, மாநில தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை மையம் கூறியது.

Related News