Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கைத்தடியை பயன்படுத்திய சம்பவம், போ​லீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

கைத்தடியை பயன்படுத்திய சம்பவம், போ​லீசார் விசாரணை

Share:

வடக்கு தெற்கு நெடு​ஞ்சாலையின் 139.6 ஆவது கிலோ மீட்டர், Pagoh-விற்கு அருகில் அந்நியப் பி​ரஜை ஒருவர் கைத்தடியையேந்திக்கொண்டு, உள்ளூர் ஆடவரை தாக்க முயற்​சித்தது, அவரின் கார் கண்ணாடியை உடைத்தது தொடர்பில் 40 வயது மதிக்கத்தக்க அந்த அந்நிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போ​லீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.

சிங்கப்பூர் பதிவு எண்ணைக் கொண்ட சிவப்பு நிற Mitsubishi Lancer ரக வாகனமோட்டியான அந்த நபர், இன்று அதிகாலை 3.30 மணியளவில் Genting Highlans-ஸில் கைது செய்யப்பட்டார். அந்த ஆடவரின் காரையும் போ​லீசார் பறிமுதல் செய்து இருப்பதாக கமிஷனர் குறிப்பிட்டார்.

கடந்த ச​னிக்கிழமை பிற்பகல் 1.58 மணியளவில் நெடுஞ்சா​லையின் அவசரத் தடத்தை பயன்படுத்திய சிவப்பு நிற Mitsubishi Lancer ரக வாகனமோட்டியான அந்த அந்நிய நாட்டவர் , தனது காருக்கு இடையூறாக குறுக்கே நின்று கொண்டு இருந்த கார், அவசரத் தடத்தை விட்டு விலகாததைக் கண்டு அதிருப்தியுற்ற நிலையில் கைத்தடியுடன் காரை விட்டு விலகி, உள்ளுர்வாசியின் கார் கண்ணாடியை பலம் கொண்டு தட்டி, உடைத்து வாய் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related News