Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பழிச்சொற்கள் குறித்து கவலைப்பட போவதில்லை
தற்போதைய செய்திகள்

பழிச்சொற்கள் குறித்து கவலைப்பட போவதில்லை

Share:

ஊழல் வாதிகளுக்கு எதிராக தாம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையினால் ஏற்படக்கூட பழிச்சொற்கள் மற்றும் விமர்சனங்களைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


லஞ்ச ஊழல் நடவடிக்கைகளை வேரறுப்பதற்கு முழு வீச்சில் இறங்கியுள்ள தாம், மக்களின் பணம் சூறையாடப்படுவதை ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.
லஞ்ச ஊழல்களும், அவற்றில் சம்பந்தப்படக்கூடிய நபர்களும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடக்கூடாது என்பதில் தாமும், தமது அமைச்சரவை உறுப்பினர்களும் உறுதி பூண்டு இருப்பதாக அன்வார் தெரிவித்தார்.


இவ்விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் போக்கு அறவே கடைப்பிடிக்கப்படாது. கொள்ளையர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு இதுவே சரியான வழிமுறையாகும் என்று பிரதமர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

Related News