Jul 28, 2026
Thisaigal NewsYouTube
20 நாய்கள் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டன
தற்போதைய செய்திகள்

20 நாய்கள் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டன

Share:

உணவில் விஷம் வைக்கப்பட்டு, கொல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் 20 தெரு நாய்கள் உடல்கள் ஒரு வீட்மைப்புப்பகுதியில் கிடந்தது, பிராணிகள் ஆர்வலர்களை ஆத்திரமடைய செய்துள்ளது.

சிரம்பான், தாமான் செரி ஆம்பர் என்ற அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் அந்த நாய்கள் கொல்லப்பட்டு கிடந்தது நேற்று மே முதல் தேதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்தை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவேசத்துடன் கோரிக்கை விடுத்தார் பிராணிகள் ஆர்வலரும்,அந்த அடுக்கு மாடி குடியிருப்புவாசியுமான எஸ்.எல். லியூ என்பவர்.

கொல்லப்பட்ட நாய்களில் சில, குட்டிகளாக பரிதாபமாக இறந்து கிடந்தது நேற்றைய மே தினத்தை தமக்கு சோகமாக்கியது என்று தனது வேதனையை அந்தப் பெண்மணி வெளிப்படுத்தினார்.

அவை தெரு நாய்களாக இருந்தாலும் விஷம் வைத்து கொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது, இதில் ஒரு குட்டி நாயை மட்டுமே தம்மால் காப்பாற்ற முடிந்ததாக அந்த குடியிருப்பு வாசி கூறுகிறார்.

நாய்கள் இறந்த கிடக்கும் காட்சியைக்கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்