Jul 28, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருவருமே நன்கு அறிமுகமானவர்கள்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருவருமே நன்கு அறிமுகமானவர்கள்

Share:

பாசிர் மாஸ், கெலாங் மாஸ் கிராமம், அலோர் பிங்கன் கிராமம் - கில் நேற்று நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரும் சந்தேகிக்கும் நபரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிமுகமானவர்களாவர்.

ஆயுதத்தை பயன்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் 39 மற்றும் 427 ஆகிய பிரிவுகளின் கீழ் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

தற்போது, இவ்வழக்கு விசாரணை 80 சதவீதம் முடிவடைந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட நபர் மீது ஏற்கனவே 7 குற்றப்பதிவுகள் இருப்பது தெரியவந்திருப்பதாவும் முகமது ஜக்கி கூறினார்.

சம்பவத்தின் போது சந்தேகிக்கும் நபர் semi auto துப்பாக்கி உட்பட Luger 9 தோட்டாக்களை பயன்படுத்திருப்பதாக முகமது ஜக்கி மேலும் குறிப்பிட்டார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே நான்கு துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும், அந்த பயங்கர சத்தத்தை கேட்டு பாதிக்கப்பட்டவர் விழித்து கொண்டதாகவும் முகமது ஜக்கி அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்